in ,

அட்டாளைச்சேனையில் இரத்ததான நிகழ்வு

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று (03)ம் திகதி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ. டீ. வீரசிங்க, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம். ஏ. சி. ஏ. ஷாபீர் அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஹங்க சாதூரிக்க, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கல்முனை தேர்தல் தொகுதி செயற்பாட்டாளர் றிஸ்லி முஸ்தபா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ. எம். எஸ். பீ. விஜயதுங்க, அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஜ்வத், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ அவர்களின் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர் கேசரா ஹசுன், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் உடற்கல்வி ஆசிரியருமான ஜெஷீல், கௌரவ பாதுகாப்பு அமைச்சரின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.சீ.றிஷாத், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாலமுனை செயற்பாட்டாளர் சவ்பத் அல்பி, பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் ஏ.சீத் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் சம்மேளனத்தின் உப தலைவருமான எம்.ஏ.எம்.சர்பான் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஒலுவில் ஆதிக்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இளைஞன் விதுசனின் மரணம், நடந்தது என்ன?

மின்சாரக் கோளாறு காரணமாக நீர் வழங்கலில் தடை