மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு 10.30 அளவில் புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி வந்தவர்களினால் 22 வயதுடைய சந்திரன் விதுசன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து வெளியில் வருமாறு கூறியபோது குறித்த இளைஞர் வெளியில் வந்ததாகவும் இதன்போது வீதியில் நின்ற புலனாய்வாளர்கள் எனக்கூறிக்கொண்டவர்கள் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர். இதன்போது குறித்த நபர்களினால் விதுசன் கடுமையான முறையில் தாக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். இதேவேளை இன்று காலை குறித்த இளைஞன் நோய் காரணமாக இறந்து விட்டதாக பெற்றோருக்கு வைத்தியசாலையிலிருந்து அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த இளைஞன் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி திருமதி ஜீவராணி கருப்பையாப்பிள்ளை மரணம் தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்தனர். மட்டக்களப்பு குற்றத்தடயவியல் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(CN)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close