Local News

சதொச நிறுவனங்களில் இன்று முதல் சேவைகள் ஆரம்பம்

வரையறுக்கப்பட்ட சதொச நிறுவனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளும் அத்தியாவவிசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை 1979 ஆம் ஆண்டின் 61 ஆவது இலக்கத்தின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் கீழ் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபத கோட்டாபய ராஜபக்‌ஷவின் கையொப்பத்துடன் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சதொச நிறுவனங்களும் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(CN)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button