
களுபோவில தெற்கு வைத்தியசாலையில் காணப்பட்ட நோயாளர்களின் நெரிசல் குறைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கான கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்ட பின்னரே இந்த அறிவித்தலை அவர் வெளியிட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கோவிட் நோயாளிகளின் நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிட்டதாகவும், புதிய கோவிட் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக இரண்டு புதிய வார்டுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை வைத்தியசாலையின் பிணவறையில் உள்ள உடல்கள் தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கும் போது தற்போது பிணவறையில் வைக்கப்பட்டிருக்கும் 37 உடல்களில், 20 உடல்கள் கோவிட் அல்லாத காரணங்களால் இறந்தவர்கள் எனவும் அவை குடும்பத்தால் அடையாளம் காணப்படாதவை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை களுபோவில தெற்கு வைத்தியசாலை தொடர்பில் அண்மையில் சமூக ஊடகங்களில் காட்டப்பட்டிருந்த போதிலும் வைத்தியசாலை நிர்வாகம் வார்டுகளை நிறுவ பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (NW)