in ,

களுத்துறை மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பகுதியில் 215. 5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் ஹொரன பகுதியில் 170.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மெனிங் சந்தை வழமைக்குத் திரும்பியது

சதொச நிறுவனங்களில் இன்று முதல் சேவைகள் ஆரம்பம்