in ,

ஜுன் 08 முதல் 12 மாவட்டங்களுக்கு?

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோபாம் தடுப்பூசிகளை எதிர்வரும் ஜுன் 08 ம் திகதி முதல் மேலும் 12 மாவட்டங்களில் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாத்தளை, நுவரெலியா, கோகாலை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, பதுள்ளை, அநுராதபுரம், புத்தளம், அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த தடுப்பூசியை வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் தடுப்பூசிகள் வழங்கும் போது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், அரச ஊழியர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில் வைரஸ் தாக்கத்தினால் அதிக ஆபத்து நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் கொவிட் -19 சினோபார்ம் தடுப்பூசிகள் வழங்க தீர்மானம் எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தின் டாக்டர் சித்ரமலி டி சில்வா தனியார் செய்திச் சேவையொன்றுக்கு தகவல் வழங்கியிருந்தார். இதேவேளை கொரோனா வைரஸினால் மரணமடைந்த கர்ப்பிணித் தாய்மார்களின் ஏழாவது தாயின் மரணம் நேற்று புதன்கிழமை பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தபால் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

மெனிங் சந்தை வழமைக்குத் திரும்பியது