in

சீனாவில் மற்றொரு புதுவகை வைரஸ்

உலகில் முதன்முறையாக சீனாவில் ஒருவருக்கு பறவைக்காய்ச்சல் தொற்று இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது. சீனாவின் ஜியாங்சு நகரை சேர்ந்த 41 வயதான நபர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் பிற உடல் உபாதைகள் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவருக்கு (H10N3) எனும் புது வகை பறவைக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த H10N3 வைரஸ் தொற்று குறைந்த அளவு பாதிப்பையே ஏற்படுத்தும் எனவும் இது கோழிகள் மூலம் பரவும் வைரஸின் திரிபு எனவும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கு அங்கீகாரம்

தபால் சேவைகள் இன்று முதல் ஆரம்பம்