in ,

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விஷேட நடைமுறை அறிமுகம்

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஒரு நாள் மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிகர்களை ஒட்டுவதற்கு தீர்மானித்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அதற்கமைய கம்பஹா , பாணந்துறை , நுகேகொடை, கல்கிசை, மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து இந்த ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை விஷேடமான சந்தர்ப்பங்களில் ஸ்டிகர் ஒட்டப்பட்டிருந்தாலும் சில வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படலாம் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். (HN) -ஏ . ஆர், பஸ்மினா, மடுல் கெலே-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கற்பூரம் எனும் பெயரில் மஞ்சள் இறக்குமதி

சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கு அங்கீகாரம்