in ,

இலங்கையை வந்தடைந்த விமானங்கள் இவைகள் தான்

இலங்கை விமான நிலையங்களில் இன்று முதல் மீண்டும் வெளிநாட்டு விமானங்களின் வருகை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டார் டோஹா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 53 பயணிகளுடன் புறப்பட்டு இலங்கை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் இன்று காலை 4.05 க்கு கட்டார் டோஹாவில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமாக UL 2018 விமானமும் தரையிறங்கியது. இந்த விமானத்தில் 116 பயணிகள் கட்டுநாக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதேவேளை விமான நிலையங்கள் திறக்கப்பட்டாலும் வியட்நாம் மற்றும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை வர அனுமதி அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அந்த நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்திற்கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் சகல விமான நிறுவனங்களுக்கும் இதுபற்றி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வியட்நாம், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ட்ரான்சிட் முறையின் கீழ் வருகை தரும் பயணிகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொடுப்பனவு 2500 ரூபாவாக அதிகரிக்கிறது

ஊரையே சோகத்தில் ஆழ்த்திய இரண்டு மரணங்கள்