in

புதிய உறுப்பினர்கள் நியமனம்

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி காமின மாரப்பன தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவொன்றே இன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது. இதற்கமைய, திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகல, நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் பிரியத் பந்து விக்ரம, இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் தலைவர் சாலிய விக்ரமசூரிய, ஓரல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குஷான் கொடிதுவக்கு, Mercantile முதலீட்டு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெராட் ஒன்டச்சி மற்றும் தனியார் நிறுவனமொன்றின் முகாமைத்துவப் பணிப்பாளரான ரொஹான் டி சில்வா ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஜுன் 30 வரை பயணக்கட்டுப்பாடு தொடருமா?

மூன்று விமான நிலையங்கள் நாளை முதல் திறப்பு