in

இதுவரையில் 1363 மரணங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவது போல் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனடிப்படையில் நேற்றைய தினம் (28)கொரோனா தொற்றாளர்கள் 38 பேர் பலியாகி உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரை காலப்பகுதியில் ஏற்பட்ட மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1363 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாட்டில் நேற்றைய தினம் (28) 2850 பேருக்கு கொவிட் தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை காலப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 177,711 ஆக அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினம் 2573 பேர் குணமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

இன்றிரவு முதல் வழங்கப்படும் பயண அனுமதி