in ,

சமூகமே விழித்துக் கொள்வோம்!

என்னைச் சுற்றி இது ஆட்டிப்படைக்கையிலேதான் இதனை எழுதத் துணிந்தேன், சந்தேகமேயில்லை… விரும்பியோ விரும்பாமலோ, கொவிட் எமது வாழ்வியல் முறைகளைப் பாரியளவில் மாற்றிக் கொண்டிருக்கிறது என்பது புதிதல்ல… அதற்கு இணைய வழி விளையாட்டுகள் மட்டும் விதிவிலக்கல்ல. அன்றாடம் ஒரு வேளை உணவிற்குக் கூட வழியில்லாமல் திண்டாடுகின்ற ஏழைப் பெற்றோர்களும் தமது பிள்ளைகள் கல்வியின் மூலம் உயர்வடைய வேண்டுமென Smart phoneகளை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். பெயருக்கு என்னமோ படிப்புத்தான். PUBG உம் Free Fire உம் Call of duty உம் தான் உண்மை நடப்பு. நினைக்கையில் நெஞ்சம் கணக்கிறது. இரவு எது? பகல் எது? என்று கூடத் தெரியாமல் உருண்டோடுகிறன அவர்களது நாட்கள். கூட்டம் கூட்டமாக கொவிட் காலத்திலும் இதற்காகவே கூடுகின்றனர். இரவு முழுவதும் விழித்து, இரவுகளைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலர் பகல் முழுவதையும் உறக்கத்திலே கழிக்கின்றனர். சிலர் தூக்கத்தையே தொலைத்து ஆரோக்கியமிழந்து கொண்டிருக்கின்றனர். பார்ப்பதற்கே கோலமிழந்து அலங்கோலமாய் அலைகின்றனர். இது தவிர, Data Card, Wi-Fi இதற்கும் மேலதிகமாக Top Up செய்வதன் மூலமாக உபகரணங்கள் வாங்கும் முறைமையும் காணப்படுகிறது. எத்தனை எத்தனையோ அத்தியவசியத் தேவைகளுக்குக் கூட பணமில்லாமல் திண்டாடுகின்ற எத்தனையோ நம்மவர்கள் எங்களுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது அவ்வாறிருக்க, ஏன் இந்தப் பணங்கள் வீண் விளையாட்டுக்களில் முதலீடு செய்யப்பட வேண்டும்??? இன்னும், நேரத்தைப் பாழ்படுத்துகின்றனர். உழைப்பிலே ஈடுபடுத்தப்பட வேண்டிய எத்தனை எத்தனையோ நிமிடங்கள், மணித்தியாலங்கள், நாட்கள், மாதங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறன… ஒரு தனி மனிதனின் பின்னடைவு குறித்த சமூகத்தின் பின்னடைவாகும். எனவே, சமூகமே விழித்துக் கொள்வோம்! -பஹ்மிதா பாரிக், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாடு முடக்கம் இல்லை. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

வாகன இறக்குமதிக்கு தொடர்ச்சியாக தடையா?