in ,

வங்கிகளுடன் தொடர்புள்ளவரா நீங்கள்??

உரிமம் பெற்ற வங்கிகளுக்கான விஷேட சுற்றறிக்கை ஒன்றை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் மூலம் சவால்களை எதிர்நோக்கியுள்ள வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைகளை நீடிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, செயற்பாட்டு பிரிவு மற்றும் செயற்பாடற்ற பிரிவு ஆகியவற்றின் கீழான கடன் வசதிகளை ஒத்திவைத்தல் அல்லது மறுசீரமைத்தல் ஆகிய சலுகைகளை வழங்குமாறு குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தொழில் இழப்பு, வருமான இழப்பு, விற்பனை இழப்பு அல்லது வணிகங்கள் மூடப்படுதல் ஆகிய நிதி ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ள தனிநபர்கள் தொடர்பில் ஆராய்ந்து, வங்கிகள் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதன்படி, அடிப்படைக் கடன் பெறுமதி, வட்டி அல்லது இவை இரண்டையும் அறவிடுவதை எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை வங்கிகள் ஒத்திவைக்க முடியும். அத்துடன், தற்போது காணப்படும் பயணக் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு அமைய, கடன் பெறுநர்களின் கோரிக்கைக்கு அமைய, கடன் தவணைக் கட்டணங்களை மீளச் செலுத்துவதற்கு, மேலதிக கட்டணங்கள் இன்றி 10 நாட்களுக்கு மேற்படாத சலுகைக் காலமொன்றை வழங்க முடியும் எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அத்துடன், 5 இலட்சம் ரூபாவுக்கு குறைவான பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடியாகும் காலத்தையும், மீளத் திரும்பும் காசோலைகள் மற்றும் காசோலை நிறுத்தற் கட்டணங்கள் ஆகியவற்றையும் ஜுன் 30 வரை நீடிக்குமாறும், மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், கடன் அட்டைகள் மற்றும் ஏனைய கடன் வசதிகளுக்கான தாமதக் கட்டணங்களையும், ஜுன் 30 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறு மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, குறித்த சலுகைகளைப் பெற்றுக் கொள்ளத் தகுதியான கடன் பெறுநர்கள், எதிர்வரும் ஜுன் 21 ஆம் திகதிக்கு முன்னர் தமது கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. அத்துடன், முன்னைய சுற்றறிக்கைகளுக்கு அமைய, தற்போது கடன் சலுகைகளை அனுபவித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு குறித்த சலுகைகள் வழங்கப்பட மாட்டாது எனவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இரண்டாவது முறையும் இலங்கை அணி தோல்வி

இலங்கைக்கு (PCR) பரிசோதனைக் கருவிகள் அன்பளிப்பு