in ,

இரண்டாவது முறையும் இலங்கை அணி தோல்வி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் பங்களாதேஷில் நடைபெற்று வரும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (25) டாக்கா சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியது. இதில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்பிகுர் ரஹீம் 125 ஓட்டங்களையும், மொஹமதுல்லாஹ் 41 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.  பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக துஷ்மந்த சமீர 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், லக்ஷான் சந்தகென் 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 247 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 141 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டது.  அதனடிப்படையில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பங்களாதேஷ் அணி 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2_0 என்று வென்றது. இதேவேளை இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 28 திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

5 இலட்சம் சினோபாம் தடுப்பூசி இலங்கைக்கு

வங்கிகளுடன் தொடர்புள்ளவரா நீங்கள்??