in ,

நாடு முடக்கம் இல்லை. புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப் போது பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெறிவித்துள்ளார். அதனடிப்படையில் இறுதிச் சடங்கில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட நேரத்தில் 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது. அரச விழாக்கள் அனைத்தும் செப்டம்பர் 1 ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரச நிறுவனங்களின் தலைவர்கள் வேலைக்குத் தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையை மட்டுமே அழைப்பதை முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதேவேளை இன்று நள்ளிரவு முதல் 500 க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட ஓர் இடத்தில் 150 பேர் மட்டுமே திருமண நிகழ்வுக்காக அனுமதிக்கப்படுவார்கள். 500 க்கும் குறைவான இருக்கை கொண்ட ஓர் இடத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.(NW)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில், மக்களே அவதானம்

சமூகமே விழித்துக் கொள்வோம்!