in ,

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு

நாட்டில் காணப்படும் அசாதாரண நிலையினை கருத்திற் கொண்டு 2020/21 ஆண்டுக்கான பல்கலைகழக நுழைவிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஜூன் 11 ம் திகதி இரவு 12 மணி வரை இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரி விண்ணப்பிக்கும் போது பாடசாலை ஊடாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் உரிய பாடசாலை அதிபரின் கையொப்பத்தையும் , தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கிராம சேவகரின் கையொப்பதையும் பெற்று விண்ணப்பத்தினை உறுதி செய்ய வேண்டிய அவசியம் இம்முறை இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே இந்த அறிவித்தல் முன்வைக்கப்பட்டுள்ளது.(VKN) -ஏ. ஆர் . பஸ்மினா, மடுல்கெலே-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

K. A. பாயிஸின் மரணம் தொடர்பில் விசாரணை

அதிகரிக்கும் கொரோனா மரணங்களும், தொடரும் கைதுகளும்