in

கருப்பு பூஞ்சை நோயால் இலங்கைக்கு ஆபத்து

இந்தியாவில் தற்போது பரவிக் கொண்டிருக்கும் பிளக் பங்கசு நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கே அதிகமாக ஏற்படுகின்றது. மிகோ மைகோஸிஸ் எனும் பங்கசினால் இந்த நோய் ஏற்படுவதாகவும் இந்நோய் இதுவரையில் இலங்கையில் பரவியதாக உத்தியோக பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது பரவி வரும் பிளக் பங்கசு நோய் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் வினவிய போதே வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்நோய் பரவியுள்ளமை இதுவரையில் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாத போதிலும் இந்தியா அயல் நாடு என்பதால் இந்நோய் பரவக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு தெரிவித்துள்ளது. (VKN) -அஸ்மியா சரீப், இக்கிரிகொள்ளாவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தனிமை படுத்தல் சட்டத்தை மீறியவர்கள் தொடர்ந்தும் கைது

பேலியகொட மெனிங் சந்தையில் நாளையும் வர்த்தக நடவடிக்கை