in

இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி

நேற்றைய தினம் 23 ஆரம்பமான இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் நடைப்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட உத்தேசித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.  துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.  பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சுழல் பந்து வீச்சாளர் தனஞ்சய த சில்வா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.  வெற்றி பெற வேண்டும் என்று பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது. இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.  பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 விக்கெட்டுக்களையும், மொஹமட் முஸ்தபிஸ் ரஹ்மான் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(AD) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

விஷேட ட்ரோன் கண்காணிப்புச் சோதனை

தனிமை படுத்தல் சட்டத்தை மீறியவர்கள் தொடர்ந்தும் கைது