
நாட்டில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள காவற்துறை இது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. நேற்று முல்லைத்தீவு பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பில் 500 ரூபாய் போலி நாணயங்கள் சிலதை வைத்திருந்த புதுக்குடியிருப்பு, 41 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சந்தேக நபர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(NW)