in ,

கிரிகெட் பிரியர்களுக்கு கவலையான செய்தி

இலங்கையில் இருந்து பங்களாதேஷ் பயணமான கிரிக்கெட் அணி வீரர்களில் இருவருக்கும் பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச போட்டித் தொடரில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணி வீரர்களான இசுறு உதான, சிரான் பெர்னாண்டோ மற்றும் அக் குழுவின் பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸுமே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகும் நிலையில் இவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் மூவருக்கும் இரண்டாவது தடவையாகவும் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரிகெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (HN) – ஏ . ஆர் , பஸ்மினா, மடுல்கெலே-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மதுவரித் திணைக்களத்தின் அறிவிப்பு

போட்டிகள் தடையின்றித் தொடரும்