நேற்று (21) இரவு 11 மணி தொடக்கம் நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக 22,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறித்த காலப் பகுதியில் ஏற்கனவே அமுலில் இருந்த தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறையை பயன்படுத்தி அல்லது ஏனைய தேவைகளுக்காக வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு எந்தவித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளனர். இருப்பினும் அத்தியாசிய தேவைகளை முன்னெடுப்பதற்கு இந்த பயணக்கட்டுப்பாடு எந்த வித தடையும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் தெரிவித்தார். பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்தாலும் அனைத்து பகுதிகளிலும் உள்ள மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி உண்டு. இதேபோன்று எவருக்காவது அத்தியவசிய மருந்து வகைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அருகிலுள்ள மருந்தகத்திற்குச் சென்று அதனைப் பெற்றுக் கொள்ள அனுமதி உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களான பேக்கரி தயாரிப்புக்கள், உணவுப் பொருட்கள், காய்கறி பழங்கள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருட்களையும் விநியோகம் செய்ய நடமாடும் வாகன சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.(AD) – ஸாமில் ஸியாத்-
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close