in ,

மக்களே அவதானம்! சடுதியாக அதிகரிக்கும் கொரோனா

சடுதியாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து நாட்டின் பல்வேறு அரச வைத்தியசாலைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், இடப்பற்றக்குறை நிலவுதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், காலி கராப்பிட்டிய வைத்தியசாலை, இரத்தினபுரி வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னர் அவர்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட சுகாதார தரப்பினருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் லால் பணப்பிடிய தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ராகம போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவு நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சடுதியாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையே குறித்த நிலைமைக்கு காரணம் என விசேட வைத்திய நிபுணர் லால் பணப்பிடிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான ராகம வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானித்த அதேவேளை வைத்தியசாலையின் சில விடுதிகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் பலவற்றில், அவசர சிகிச்சைப் பிரிவுகளும் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

உதய கம்பன்பிலவுக்கு அமோக ஆதரவு

போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில், மக்களே அவதானம்