in ,

202 உடல்கள் வரை ஓட்டமாவடியில் நல்லடக்கம்

கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்கள் ஓட்டாமவடி _ மஜ்மா நகர் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாத்திரம் 08 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதோடு கடந்த திங்கள் முதல் நேற்றைய தினம் வரை 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோரளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார். இதேவேளை இதில் கிறிஸ்தவ, இந்து, சிங்கள, முஸ்லிம் உட்பட இதுவரையில் 202 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (VKN) -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து நாடு முடங்குமா?

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் தீ பரவல்