in ,

போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு ஏற்படப் போகும் சிரமம்

கனரக வாகனங்களுக்கு அனுமதிப் பத்திரம் பெற விரும்பினால் அந்த சாரதி போதைப்பொருள் பாவிப்பவரா, இல்லையா, என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொண்ட பின்னரே கனரக சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகோ தெரிவித்துள்ளார். புதிதாக அனுமதிப் பத்திரம் பெறுபவருக்கும் மற்றும் அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பவருக்குமே இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்ட நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்த நிலையில் அதில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகோ மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.(HN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாளை இரவு முதல் நாடளாவிய ரீதியில் முழு நேர பயணத்தடை

தொடர்ச்சியாக அதிகரிக்கும் உயிரிழப்புகள்