in ,

M. H. M. சாஜஹான் அதிபரின் வேண்டுகோளில் சினோபார்ம் தடுப்பூசி

-சப்ராஸ் அபூபக்கர்- குருநாகல் மாவட்ட கெகுணகொல்ல பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் கிராமங்கள் சிலவற்றுக்கான தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. குளியாபிடிய தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முஸ்லிம் அமைப்பின் தலைவர் M. H. M. சாஜஹான் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் அவர்களின் விஷேட சிபாரிசின் நிமித்தம் இந்த தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கெகுணகொல்ல பிராந்தியத்தில் உள்ள 30-60 வயதிற்குட்பட்ட பலருக்கே இந்த சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை கடந்த வாரம் இதே பிரதேசத்தில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட பலருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கெகுணகொல்ல பிராந்தியத்தில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்

மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய