Local News

07 மாவட்டங்களில் தனிமைப்படுத்தல் நீக்கம்

07 மாவட்டங்களில் உள்ள 37 பிரதேச செயலக பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று (17) விடுவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருகோணமலை, களுத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா, கம்பஹா, பொலன்னறுவை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரதேசங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை நாடு முழுவதும் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு இன்று (17) அதிகாலை 04 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.(CTN) -அஸ்மியா ஷரீப், இக்கிரிகொல்லாவ-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button