in ,

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மரணம்

கொபேகன பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக நிகவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு வலிப்பு நோயும் காணப்படுவதால் சிசேரியன் அறுவைச் சிகிச்சை நேரம் வலிப்பு அதிகரித்து குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்தன கென்தகமுவ தெரிவித்துள்ளார். இதேவேளை சிசு பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்தியர்கள் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(HN) -இஷாதா ஸப்வான், பூகொடை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

குழந்தைகள் தொடர்பில் எச்சரிக்கை

உக்குவெல பிரதேச வங்கியொன்றில் திடீர் தீப்பரவல்