in ,

வீட்டுத் திட்டம் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுடனான பிரதமரின் சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கென முன்மொழியப்பட்ட வீட்டுத்திட்டங்கள் மற்றும் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார். அந்த திட்டங்களை தாமதமின்றி துரிதமாக நிறைவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அமைச்சர் என்ற ரீதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

காஸாவில் அவதியுறும் மக்கள்

இலங்கைப் பயணிகளுக்கு அனுமதியில்லை