in ,

எதிர்வரும் இரண்டு வாரங்களில் டெல்டா வைரஸின் பரவல் அதிகரிக்கலாம்

நாட்டில் வேகமாக பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் எதிர்வரும் இரண்டு வாரங்களில் மேலும் பரவலடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் நாட்டின் பல பாகங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதேவேளை டெல்டா வகை வைரஸ் நாட்டில் தொடர்ந்தும் பரவலடைவதை தடுக்க வேண்டுமாயின் பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார். -CN-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நாரம்மல இளைஞன் கைது

மாகாணங்களுக்கிடையிலான பொதுப்போக்குவரத்து இடைநிறுத்தம்