Local News

கொரோனா அச்சுறுத்தலில் தாதியர்கள் சிலர்

நாடளாவிய ரீதியில் பல்வேறு வைத்தியசாலைகளில் பணியாற்றும் தாதியர்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது அதிகமான தாதியர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இதனை அரசாங்க தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்ன பிரிய உறுதி செய்துள்ளார். அதனடிப்படையில் திருகோணமலை வைத்தியசாலையில் 17 தாதியரும், ராகமை வைத்தியசாலையில் 08 தாதியரும், குருநாகல் வைத்தியசாலையில் 03 தாதியரும், கேகாலை வைத்தியசாலையில் 04 தாதியரும், கராபிடிய வைத்தியசாலையில் 04 தாதியரும் என சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை மொத்தம் 70 ம் மேற்பட்ட தாதிமார்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தாதியர் சங்கத் தலைவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(VKN) -அஸ்மியா பானு, இக்கிரிகொல்லாவ-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button