Local News

அடுத்த வாரம் முதல் சினோபாம் தடுப்பூசி

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட சினோபாம் தடுப்பூசியை அவசர தேவைகளுக்குப் பயன்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி அளித்துள்ளது. இலங்கையில் உள்ள சீனப்பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, கொவிட் 19 ஐ தடுக்கும் 79 சதவீதம் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இந்தத் தடுப்பூசியானது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 64 பில்லியன் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் குறித்த தடுப்பூசியை இலங்கையில் உள்ள பொது மக்களுக்கு அடுத்த வாரம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.(HN) -இஷாதா சப்வான், பூகொடை-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button