பிறைநிலா ஊடக வலையமைப்பு காலத்துக்குத் தேவையான பல்வேறுபட்ட புதுமையான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கிறது. பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர், ஊடகவியலாளர் சப்ராஸ் அபூபக்கர் அவர்களின் சிந்தனையிலும், தயாரிப்பிலும் உருவான நிகழ்ச்சி தான் “சொல்ல மறந்த கதை”. இலங்கையின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரதேசங்களுக்குச் சென்று அந்த மக்களின் கஷ்டங்களையும், அவலங்களையும் ஆவணப்படுத்தி ஔிபரப்பு செய்து வருகிறது பிறைநிலா ஊடக வலையமைப்பு. அதனடிப்படையில் பிறைநிலா ஊடகம் அண்மையில் திருகோணமலை மாவட்டத்துக்கு விஜயம் செய்து சர்க்கரை நோயினால் கால் வெட்டி அகற்றப்பட்ட ஒரு தாயினுடைய வாழ்க்கையை ஆவணமாக வழங்கியிருந்தது. அதனைப் பார்த்த இலங்கைையைச் சேர்ந்த இரு உறவுகள் வெளிநாட்டிலிருந்து தொடர்பு கொண்டு அந்த சக்கர நாற்காலியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நேற்று வியாழக்கிழமை குறித்த தாய்க்குத் தேவையான சக்கர நாற்காலி உட்பட அத்தியவசிய பொருட்கள் சிலவும் வழங்கி வைக்கப்பட்டது. பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சப்ராஸ் அபூபக்கர் அந்தத் தாயினுடைய வீட்டுக்கு விஜயம் செய்து குறித்த பொருட்களை வழங்கி வைத்திருந்தார். இந்த நிகழ்வை வெற்றிகரமாய் முன்னெடுப்பதற்கு பொருளாதார உதவிகளை செய்த பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு உறவுகளையும் உங்களது பெருமதியான துஆக்களில் இணைத்துக் கொள்ளுமாறு பிறைநிலா நிர்வாகம் உங்களை வேண்டிக் கொள்கிறது.
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close