in ,

காணாமல் போன பயணிகள் விமானம்

கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 28 பயணிகளுடன் பயணித்த விமானமொன்று ரஷ்யாவில் இன்று காலை காணாமல் போயுள்ளது. AN-26 இலக்க விமானம் கம்சட்ஸ்கியில் இருந்து பலானா பகுதியை நோக்கிப் பயணித்த நிலையிலேயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆறு விமானப் பணியாளர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 28 பேர் விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானத்தை தேடும் பணியில் இரண்டு ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை, மோசமான தொழில்நுட்பப் பராமரிப்பு மற்றும் குறைவான பாதுகாப்பு விதிமுறைகள் போன்றவற்றுடன் ரஷ்யா நீண்ட காலமாக விமானப் பாதுகாப்பு குறித்த விடயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வெலம்பொட பகுயில் முருங்கைக்கன்றுகள் வழங்க ஏற்பாடு

நாரம்மல இளைஞன் கைது