in ,

ஹந்தஸ்ஸ LIYA FOUNDATION னின் சாதனை

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளிவந்த 2020 கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளில் உடுநுவர_ ஹந்தஸ்ஸ LIYA Foundation ல் கல்வி கற்ற 77 மாணவர்கள் விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்துள்ளனர். இவர்களில் ஹபுகஸ்தலாவயைச் சேர்ந்த M.A.F ஸுஹைனா 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 2ம் இடத்தையும் M.S.F ரஷீதா 2AB சித்திகளைப் பெற்று மாவட்ட ரீதியில் 13ம் இடத்திலும் உள்ளனர். இதேவேளை ABB சித்திகளை 5 மாணவர்களும், ABC சித்திகளை 6 மாணவர்களும், BBB சித்திகளை 2 மாணவர்களும், BBC சித்திகளை 10மாணவர்களும், ACC சித்திளை 3 மாணவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த கல்வி நிறுவனம் உடுநுவர_ஹந்தஸ்ஸ பகுதியில் கடந்த 5 வருடங்களாக விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஆப்பு வைத்தது தம்மிக பாணி

உடன் அமுலாகும் விதத்தில் தடை செய்யப்படுகிறது