in , ,

ஹொரவபொத்தான, பதியூதீன் மஹ்மூத் மகா வித்தியாலயத்தில் 19 மாணவர்கள் சித்தி

-முஹம்மட் ஹாசில்- 2020 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹொரவபொத்தான, பதியூதீன் மஹ்மூத் மகா வித்தியாலயத்தில் 34 மாணவர்கள் கலைப் பிரிவில் தோற்றி அவர்களில் 19 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் ஆர். இஷாக் தெரிவித்தார். இவ்வாறு சித்தியடைந்த மாணவர்களுள் 6 மாணவர்கள் பல்கலைக்கழகம் பெற தகுதி பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அந்த ஆறு மாணவர்களின் விபரம்: A.S IRSANA – 2AB – 1.5710 H.F RISANA – 2AB – 1.3497 M.S.F SAHRA – ABC – 1.2131 B. NALEERA BANU – A2B – 1.1715 R. IMRANA – ABC – 0.9116 M.K.M RASLAN – ABC – 0.9077 அத்துடன் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தியாகம் பெரிதும் பாராட்டப்படவேண்டியது எனவும் இதற்காக பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பாடசாலையின் அதிபர் ஆர். இஷாக் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

ஆப்பு வைத்தது தம்மிக பாணி