in ,

சாதனை படைத்த அங்குநொச்சிய, அல்மாஸ் மகா வித்தியாலயம்.

முஹம்மட் ஹாசில் 2020 க.பொ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் ஹொரவபொத்தான, அங்குநொச்சிய அல்மாஸ் மஹா வித்தியாலயத்தின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வரலாற்றுச் சாதனையை எட்டியுள்ளது. 33 மாணவர்கள் கலை துறையில் பரீட்சைக்குத் தோற்றி 25 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதோடு அதில் 11 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தார். இம்முறை அதிகூடிய மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றுள்ளமை பாடசாலையின் வரலாற்றுச் சாதனையாகப் பதிவாவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். அத்துடன் கொவிட்19 அசாதாரண சூழ்நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தியாகம் பெரிதும் பாராட்டப்படவேண்டியது எனவும் இதற்காகப் பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பாடசாலையின் அதிபர் ஏ.ஜ.எம் தௌபீக் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நுபைல் அஹ்மத் 3A சித்திகள் பெற்று சாதனை

வட மாகாணத்தில் 43 பேருக்கு கொரோனா தொற்று