in ,

வறுமை ஒரு பொருட்டே அல்ல. 3A சித்திகளைப் பெற்றார் மொஹமட் சஹீட் மொஹமட் சர்தான்

குருநாகல் மாவட்டம், கெகுணகொல்ல தேசிய பாடசாலை மாணவன் மொஹமட் சஹீத் மொஹமட் சர்தான் வெளிவந்த க.பொ.த உயர் தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்றுள்ளார். மடிகே மிதியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சர்தான் தனது ஆரம்பக் கல்வியை மடிகே மிதியால மத்திய கல்லூரியிலும் உயர் தரத்தை கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவிலும் கற்றார். A. L. M. சஹீத், U. L. F. ரிஸானா தம்பதியினரின் புதல்வரான இவர் மிகக் கடுமையான வறுமைக் கோட்டுக்குள் வாழ்ந்தாலும் தன்நம்பிக்கை என்று ஒன்று மட்டுமே இம்மாணவனுக்கு ஆயுதமாக இருந்துள்ளது. இவருடைய உயர் தர பாடசாலை நாட்களில் இவருடைய சகோதரன் வழங்கிய பொருளாதார உதவியே சர்தானின் பாதி வெற்றியைத் தீர்மானித்துள்ளது. -ஹாபிஸ் ஆசிரியர்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

சபீகுர் ரஹ்மான் 3 A சித்திகள்

நுபைல் அஹ்மத் 3A சித்திகள் பெற்று சாதனை