in ,

பரிசோதனை உபகரணங்கள் தொடர்பில் அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டில் துரித வேகத்தில் பரவி வரும் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகமான அளவில் கண்டறியப்பட்டு வருகின்றனர். ஆயினும் இலங்கையில் நாளொன்றிற்கான PCR பரிசோதனைகள் 20,000 ஆக இருக்கின்ற நிலையில் அதனுடைய கேள்வி மேலும் அதிகரிக்கலாம் என எதிர்வு கூறப்படுகின்றது. இந் நிலையில் அவற்றை நிறைவுசெய்வதற்காக அரச ஆய்வு மையங்களில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே PCR பரிசோதனையை மேற்கொள்ளத் தேவையான அனைத்து உபகரணங்கள் மற்றும் துணை உபகரணங்களை துரிதமாக கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சுகாதார அமைச்சர் வழங்கிய யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. (ADN) -அஹமட், மாவனல்லை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ரஷ்யாவினால் இலங்கைக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசிகள்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்ச கட்டத்தில்