in ,

“சௌமிய நூலகம்” மீள் திறந்து வைக்கப்பட்டது

கண்டி, பன்வில பிரதேச சபைக்குட்பட்ட கலாபொக்க கிராமத்தில் உள்ள நூலகத்தை மீள் திறக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. “சௌமிய நூலகம்” எனப்படும் இந்நூலகம் 1987ம் ஆண்டு சிறந்த கல்வி நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டு முறையான செயற்பாடுகளின்றி நெடுங்காலமாக பயனற்று இருந்தது.

இந்நூலகத்தை யாழ் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறை மாணவி செல்வி.பா.கனகேஸ்வரி தனது தனியார் செயற்திட்டமாக முன்னெடுத்து நேற்றைய தினம் பொது மக்கள் பாவனைக்காக வழங்கி வைத்தார். இந் நூலகத்தை பன்வில பிரதேச சபை உறுப்பினரான ச.சிவலிங்கம் மற்றும் கலாபொக்க தோட்ட அதிகாரி இணைந்து திறந்து வைத்தனர். இவர்களோடு சிறகுகள் அமைய உறுப்பினர்கள், புதிய சிறகுகள் அமைப்பு, ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் இந்த திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர். -ஏ.ஆர்.பஸ்மினா, மடுல்கெல்ல-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இலங்கையில் போதியளவு மருந்துகள் கைவசம்??

அநுராதபுர மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பதியேற்வு