in ,

08 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்

நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் உள்ள 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுகின்றன. இதன்படி கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உக்கல கிராம உத்தியோகத்தர் பிரிவு, கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்விஸ் வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் கிராம உத்தியோகத்தர் பிரிவு என்பனவற்றோாடு நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, களுத்துறை மாவட்டத்தின் பாணந்துரை தெற்கு பொலிஸ் பிரிவின் பிங்வத்த நாரம்பிட்டிய பிங்வத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பண்டாரகம பொலிஸ் பிரிவின் பண்டாரகம கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவும் உடன்அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. (CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

கல்வி அமைச்சு இணையத்தில் சேவையை தொடர்கிறது

ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த படகு விபத்து