in ,

மட்டுப்படுத்தப் படுகிறது தனியார் பேரூந்து சேவை

அனைத்து பாதைகளுக்குமான தனியார் பேரூந்து சேவையை வழமையை விட 25 வீதமாகக் குறைக்க இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று ( 02 ) ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய தனியார் பேரூந்து சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டுள்ளதாலேயே இம்முடிவு எட்டப்பட்டதாக குறிப்பிட்டார். சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக தனியார் பேரூந்துகள் 90% திறனில் சேவையை வழங்கியதாகவும் தற்போது பயணிகளின் வீழ்ச்சியால் 50% இற்கும் குறைவான திறனிலேயே பேரூந்துகள் இயங்குகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பாடசாலைகள் மற்றும் கல்வி வகுப்புக்களும் மூடப்பட்டிருக்கும் வேளையில் தனியார் மற்றும் அரசுச் சேவையின் பல அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் பேரூந்து சேவைகள் இன்று முதல் 25% ஆக குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். குறைந்த பயணிகளைக் கொண்டு பயணிப்பதால் எரிபொருள் செலவைக் கூட ஈடு செய்ய முடியவில்லை என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.(KKN) -பாத்திமா நுஹா நிஸார்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

வீடுகளில் மக்கள் கூடும் அத்துனை நிகழ்வுகளுக்கும் தடை உத்தரவு

கல்வி அமைச்சு இணையத்தில் சேவையை தொடர்கிறது