in ,

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது நியூஸிலாந்து அணி

ஐ.சி.சி. யினால் நடாத்தப்படும் முதலாவது உலகக்கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான குறித்த போட்டி இங்கிலாந்தின் சவுத்ஹெம்ப்டனில் இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்சில் 217 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி 249 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது. இந்தியா அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 170 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 139 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்று பதிலுக்கு துடுப்பெடுத்தாட கலமிறங்கிய நியூஸிலாந்து அணி 140 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுக்களை இழந்து 8 விக்கட்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி இலக்கை அடைந்து ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.(HN) -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் PCR பரிசோதனை முன்னெடுப்பு

துமிந்த சில்வாவுக்கு விடுதலை?