in ,

வீடுகளில் மக்கள் கூடும் அத்துனை நிகழ்வுகளுக்கும் தடை உத்தரவு

நாட்டில் மீண்டும் தீடீரென அதிகரித்து வரும் கோவிட்_19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக விருந்துபசாரங்கள் மற்றும் கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளை வீடுகளில் நடத்துவதற்கு தடையுத்தரவு பிறபிக்கபட்டுள்ளதாக இராணுவத் தளபதியும், கொவிட் தடுப்புச் செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் மண்டபங்கள் மற்றும் பொது இடங்களில் திருமண நிகழ்வுகள் மற்றும், விருந்துபசாரங்கள், கூட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையிலே வீடுகளிலும் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகள், மற்றும் விருந்துபசாரங்கள், கூட்டங்களை நடாத்த அனுமதியில்லை என கூறியிருக்கும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வரும்வரை அத்தியாவசிய தேவையில்லாமல் அயல் வீடுகளுக்கு செல்வது, உறவினர், நண்பர்கள் வீடுகளுக்கு செல்வது மற்றும் உறவினர்களை தமது வீடுகளுக்கு அழைப்பதையும் நிறுத்துமாறும் இராணுவத் தளபதி லெப்டினல் சவேந்திர சில்வா நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.(TJN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஆட்பதிவுத் திணைக்களம் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது

மட்டுப்படுத்தப் படுகிறது தனியார் பேரூந்து சேவை