in ,

க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகள் மே 5 ம் திகதி??

2020ம் ஆண்டுக்கான க. பொ. த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மே 5 ம் திகதி வெளியிடப்படலாம் என பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு விடுத்துள்ளது. முன்னதாக ஏப்ரல் 30 ம் திகதி வெளியிடப்படவிருந்த இப் பரீட்சை முடிவுகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதால் , முடிவுகளை வெளியிட முன் கணக்கிடப்பட்ட மதிப்பெண்கள் ( zscores) சரி பார்க்கப்பட வேண்டும் என பரீட்சை வட்டாரங்கள் கூறியுள்ளன. தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையைத் தொடர்ந்து, செயல்முறை முடிந்ததும் மே 5 அல்லது அதற்கு முன் பெறுபேறுகளை வெளியிட முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை முடிவுகளுக்கிணங்க 2021 செப்டம்பர் மாதத்துக்குள் மாணவர்களை பல்கழைக்கழகங்களில் சேர்ப்பதற்குறிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் பரீட்சை சம்மந்தமான விடயங்களை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ வலைத்தளமான www.doenets.lk ஊடாக பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.(VKN) -இஷாதா ஸப்வான் பூகொடை-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

நுஷாத் பெரேரா பதவியிலிருந்து ராஜினாமா

மே 03 முதல் பயணிகள் வருகையின் எண்ணிக்கை குறைப்பு