in

வடமாகாணத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா வைரஸின் தாக்கம்

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வடக்கு மாகாணத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய அதிகாரி, ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 454 பேரின் மாதிரிகள் நேற்று (சனிக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த முடிவுகளின்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஏழு பேருக்கும் மன்னார், வவுனியா மாவட்டங்களில் தலா நால்வருக்கும் முல்லைத்தீவில் மூவருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், திருநெல்வேலியில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்தநோயாளி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும்,யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் நிலைய விடுதியில் இருந்த மூவருக்கும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்ற இருவருக்கும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கும் தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வவுனியா பொதுச் சந்தையில் வியாபாரிகளிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் ஒருவருக்குத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், வவுனியா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் இருவருக்கும் பூவரசம்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கும் இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மன்னார் வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வருக்கும் தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. மேலும், முல்லைத்தீவு பொது வைத்தியசாலை, மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் மல்லாவி ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றுவந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஏழு பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்திய அதிகாரி ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். (TJN) -சாமில் சியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தொடரும் இடைக்காலத் தடை

நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்…