in ,

ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் PCR பரிசோதனை முன்னெடுப்பு

நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் (22.06.2021) சுகாதார பிரிவினரால் ஹபுகஸ்தலாவ மஸ்ஜிதுன் நூர் ,கல்லுமலை மற்றும் ஹபுகஸ்தலாவ பஸார் பகுதிகளில் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்றைய தினம் மொத்தமாக 233 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெறுபேறுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதேவேளை கொத்மலை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஹபுகஸ்தலாவ, கலுதாமட, பகல கொரக்கோய கிராம சேவகர் பிரிவுகள் கடந்த (21.06.2021) ம் திகதி அதிகாலை நான்கு மணி முதல் மறுஅறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. -ஸாமில் ஸியாத்-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

ஜெய்லானி தேசிய பாடசாலையின் புதிய அதிபர் பதவிகளை பொறுப்பேற்றார்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது நியூஸிலாந்து அணி