in ,

இளஞ்சிவப்பு வட்சப் (Pink WhatsApp) பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இது ஒரு போலிச் (Fake) செயலியாகும். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது பாதுகாப்பற்றது. உங்களது கைபேசியில் உள்ள தகவல்கள் மற்றும் தரவுகள் திருடப்படுவதற்கான வாய்ப்புகள் இதில் மிக மிக அதிகம். இந்த Pink WhatsApp செயலி என்பது பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு (Hackers), கைபேசியின் வேர் (Root) வரை நுழைந்து (Access) கைபேசியை முழுமையாக கட்டுக்குள் (Control) கொண்டுவர உதவும். எனவே, இது ஒரு பாதுகாப்பற்ற செயலியாகும். முதலாவது, இந்த Pink WhatsApp செயலியை பதிவிறக்கம் செய்யாதீர்கள். வழமையான WhatsApp இனை விட இதில் அதிக வசதிகள் உள்ளதாக ஒரு செய்தி தற்போது பல WhatsApp குழுக்களிலும் பகிரப்படுகிறது. எனவே, இப்படியான செய்திகள் Pink WhatsApp Link இணைப்புடன் வந்தால் அழுத்தி (Click) பதிவிறக்கம் செய்ய முயற்சிக்காதீர்கள். இரண்டாவது, நீங்கள் இந்த Pink WhatsApp இணை பதிவிறக்கம் செய்திருப்பின் உடன் அதனை அகற்றி (Uninstall) விடுங்கள். மூன்றாவது, WhatsApp Pink வழியாக நீங்கள் WhatsApp Web முறையில் வேறு ஏதும் உபகரணங்களை (Devices) இணைந்திருந்தால் (Link) உடன் அவற்றை பிரித்து (Unlink) விடுங்கள். நான்காவது, Settings இல் இருந்து தேடல் படிவுகள் அடங்கிய (Browser cache) பகுதியை நீக்கி (Clear) விடுங்கள். ஐந்தாவது, உங்கள் செயலிப் பட்டியலில் (Apps List) நீங்கள் பதிவிறக்கம் செய்யாத மற்றும் அனுமதி வழங்காத ஏதும் சந்தேகமான நுழைவு அனுமதி (Access Permission) பெற்ற செயலிகள் இருந்தால் அவற்றையும் அகற்றி (Uninstall) விடுங்கள். இஸ்பஹான் சாப்தீன் ஊடக பயிற்றுவிப்பாளர் 01.05.2021

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

மாத்தளை பொலிஸ் பிரிவு தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்

தற்காலிகமாக மூடப்படுகிறது மோட்டார் வாகன திணைக்களத்தின் இரண்டு கிளைகள்