in ,

உழைக்கும் மக்கள் வெற்றி பெற வாழ்த்துகள்

உழைக்கும் சமூகங்களை பெரிதும் பாதிக்கும் வறுமையை ஒழிப்பதற்கான பொருளாதாரத் திட்டத்தை அரசு வகித்து முறையாக செயற்படுத்தி வருகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தேசிய கைத்தொழிலை மேம்படுத்தும் அதே நேரம் விவசாயப் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய கொவிட் நோய்த் தொற்றினால் உலகில் சவாலுக்குள்ளாகியுள்ள பிரிவினர் தொழிலாளர் வர்க்கமாகும். எனவே அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் கட்டுப்பாடு விதிக்காமல் அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஒரு லட்சம் தொழில் வாய்ப்பு ,5000/= கொடுப்பணவு உழைக்கும் மக்களுக்காகவும் மக்களின் போராட்டத்திற்காகவும் அரசு ஆதரவு வழங்கியுள்ளது. கொவிட் நோய்த்தொற்று எதிர்பாராத விதமாக இரண்டாவது வருடமாகவும் மே தின கொண்டாட்டங்களையும் ஊர்வலங்களையும் இழந்துள்ளது. ஆயினும் உங்கள் உறுதி, அர்ப்பணிப்பு, மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்திற்கான திட்டத்துடன் கைகோர்க்கும் உங்களுக்கு சர்வதேச தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்த, அர்த்தப்படுத்திய மகிழ்ச்சியுடன் எனது சர்வதேச தொழிலாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது நாட்டின் உழைக்கும் மக்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.(TKN) -சமூன் பாதிமா பஸ்னா கம்பிரிகஸ்வெவ-

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

இளைஞர் குழுவொன்று கைது

மேல் மாகாணத்தில் சிலர் கைது