in

கடமைகளை மறந்த உரிமைகள்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. சக்திக்கு மீறிய பணிகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. இவ்வாறு ஆதிக்க சக்திகளாலும் முதலாளித்துவ வர்க்கத்தினராலும் தொழிலாளர் சமூகம் வஞ்சிக்கப்பட்டு வந்தது. தொடர்ச்சியான போராட்டங்களின் பின்னர் இன்று சர்வதேச அளவில் தொழிலாளர் உரிமைகளைப் பேணக் கூடிய சட்டதிட்டங்கள் உள்ளன. அவர்களுக்கான ஊதியம், வேலை நேரம், ஓய்வு, சலுகைகள் என்பன நிர்ணயிக்கப்பட்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளை சட்ட ரீதியில் அணுகுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. சர்வதேச சட்டங்கள் தொழிலாளர் உரிமைகளைப் பற்றிப் பேசும் முன்னரே இஸ்லாம் தொழிலாளர் நலன் பற்றிப் பேசியது. நபி(ச) அவர்கள் காலத்தில் அடிமைகள் இருந்தனர். அவர்கள் மனிதப் பிறவிகளாகவே மதிக்கப்பட்டது கிடையாது. நபி(ச) அவர்கள் இத்தகைய அடிமைகளை வேலை செய்யப் பணிப்பதாக இருந்தாலும் அவர்களின் சக்திக்கு மீறிய வேலைகளைக் கொடுக்கக் கூடாது, பாரமான பொருட்களை சுமக்குமாறு பணித்தால் எஜமானனும் கூட நின்று ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் அடித்துத் துண்புறுத்தப்படக் கூடாது. அவர்களுக்குரிய உணவு வழங்கப்பட வேண்டும் என்றெல்லாம் போதித்தார்கள். இதே வேளை, இஸ்லாம் உழைப்பை ஊக்குவிக்கின்றது. உழைக்கும் வர்க்கம்தான் நாட்டின் முதுகெலும்பாக நிற்கின்றது. இஸ்லாமிய தூதைச் சுமந்து வந்த இறைத்தூதர்களும் உழைப்பாளிகளாக இருந்துள்ளனர். ஸகரிய்யா நபி தச்சராகவும், தாவூத் நபி கவசம் செய்பவராகவும், அனைத்து நபிமார்களும் ஆடு மேய்த்தவர்களாகவும் இருந்துள்ளனர். நபி(ச) அவர்கள் ஆடு மேய்த்துள்ளார்கள், வர்த்தகம் செய்துள்ளார்கள். நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் உழைப்பாளியை இஸ்லாம் உயர்வாகப் பார்க்கின்றது. உழைப்பாளிகளின் பயண வசதிகளைக் கவனத்திற் கொண்டு நீண்ட நேரம் தொழுவதையும் இஸ்லாம் தவிர்க்கச் சொல்கின்றது. தொழுது முடிந்தால் பூமியில் பரந்து சென்று உழையுங்கள் என்கின்றது. இஸ்லாம் இவ்வாறு உழைப்பின் உயர்வு பற்றியும் பேசுகின்றது. உழைப்பாளியின் உரிமை பற்றியும் பேசுகின்றது.

"use strict"; var adace_load_638a76b23ab79 = function(){ var viewport = $(window).width(); var tabletStart = 601; var landscapeStart = 801; var tabletEnd = 961; var content = '%3Cdiv%20class%3D%22adace_adsense_638a76b23ab4b%22%3E%3Cscript%20async%20src%3D%22%2F%2Fpagead2.googlesyndication.com%2Fpagead%2Fjs%2Fadsbygoogle.js%22%3E%3C%2Fscript%3E%0A%09%09%3Cins%20class%3D%22adsbygoogle%22%0A%09%09style%3D%22display%3Ablock%3Bwidth%3A970px%3Bheight%3A250px%3B%22%0A%09%09data-ad-client%3D%22ca-pub-1761796395144118%22%0A%09%09data-ad-slot%3D%224982020363%22%0A%09%09%0A%09%09%3E%3C%2Fins%3E%0A%09%09%3Cscript%3E%28adsbygoogle%20%3D%20window.adsbygoogle%20%7C%7C%20%5B%5D%29.push%28%7B%7D%29%3B%3C%2Fscript%3E%3C%2Fdiv%3E'; var unpack = true; if(viewport=tabletStart && viewport=landscapeStart && viewport=tabletStart && viewport=tabletEnd){ if ($wrapper.hasClass('.adace-hide-on-desktop')){ $wrapper.remove(); } } if(unpack) { $self.replaceWith(decodeURIComponent(content)); } } if($wrapper.css('visibility') === 'visible' ) { adace_load_638a76b23ab79(); } else { //fire when visible. var refreshIntervalId = setInterval(function(){ if($wrapper.css('visibility') === 'visible' ) { adace_load_638a76b23ab79(); clearInterval(refreshIntervalId); } }, 999); }

})(jQuery);