பலாங்கொட, ஜெய்லானி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக ஜனாப் M. J. M. மன்சூர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தார். அவருக்கான பாடசாலையின் பொறுப்புக்களை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
ஜெய்லானி தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் ரிசாத் மொஹமட் இந்தப் பொறுப்புக்களை புதிய அதிபர் மன்சூர் அவர்களிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் பாடசாலை நிருவாக உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.